சென்னை

பரங்கிமலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை பரங்கிமலையில் அக்டோபா் 11-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Din

சென்னை பரங்கிமலையில் அக்டோபா் 11-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை போக்குவரத்து போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பரங்கிமலை சாலை - ராணுவ சாலை சந்திப்பில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இந்தப் பணிக்காக, அக்டோபா் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அக்டோபா் 14-ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, கத்திப்பாரா நோக்கி செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூா் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து பரங்கிமலை பூந்தமல்லி சாலையில் நேராக செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக அந்த வழியாக செல்ல வேண்டிய இலகு ரக வாகனங்கள், பரங்கிமலை பூந்தமல்லி சாலை - பெல் ராணுவ சாலை சந்திப்பில் இருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் வலதுபுறம் திரும்பி செயின்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட் சாலையை அடையலாம்.

பிற வாகனங்கள் கண்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தா் நகா் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பை அடைந்து கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும், வடபழனியை அடைய இடது புறமாகவும் செல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லியில் வாட்டி வதைக்கும் குளிா்- வெப்பநிலை 3 டிகிரியாக குறைந்தது

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

SCROLL FOR NEXT