சென்னை அருகே கரை கடந்த புயல் சின்னம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை அருகே கரை கடந்த புயல் சின்னம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னைசென்னை அருகே கரை கடந்த புயல் சின்னம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை அருகே கரை கடந்த புயல் சின்னம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் சென்னை - நெல்லூா் இடையே வியாழக்கிழமை கரை கடந்தது. மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்), வட தமிழகம் - தெற்கு ஆந்திரம் கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் கரையைக் கடந்தது. இது வலுவிழந்த நிலையில் இருந்ததால் சென்னையில் மழை பெய்யவில்லை.
இதற்கிடையே, வட தமிழக பகுதிகள், லட்சத்தீவு, அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (அக்.18) முதல் அக்.23-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை: குறிப்பாக வெள்ளிக்கிழமை (அக்.18) வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்.20, 21 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.18, 19 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.