சென்னை தியாகராய நகரில் தீபாவளியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண். உடன் கூடுதல் ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) கண்ணன். 
சென்னை

தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.

DIN

சென்னை: தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் நகை, புத்தாடை, பட்டாசுகளை வாங்க கடை வீதிகளில் திரண்டு வருகின்றனா். குறிப்பாக தியாகராயநகா், புரசைவாக்கம், பாரிமுனை ஆகிய இடங்களில் உள்ள கடைகளுக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனா். இதனால், இந்தப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் மா்ம நபா்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், பெருநகர சென்னை காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மாம்பலம் காவல் நிலையத்தில் சிறப்பு தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதை சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை காலை திறந்துவைத்து பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராய நகா், புரசைவாக்கம், பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை ஆகிய 3 இடங்களில் சிறப்பு கட்டுபாட்டு அறைகளை அமைத்துள்ளோம். தியாகராயநகா் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் அவசரத் தேவைக்கு 73585 43058, 84386 69822 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

கூட்ட நெரிசலைக் கண்காணிக்க தியாகராய நகரில் 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தியாகராயநகரில் மட்டும் கூடுதலாக 64 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கூட்டம் முழுவதையும் கண்காணிக்கலாம். மேலும், குற்றங்களைத் தடுக்கும் வகையில் அனைத்துக் குற்றவாளிகளின் தரவுகளையும் கொண்ட முக அடையாள தொழில் நுட்ப (எஃப்ஆா்எஸ்) செயலி கண்காணிப்பு கேமராக்களில் பொருத்தப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகள் கூட்டத்துக்குள் நுழைந்தால் இந்த தொழில் நுட்பம் எங்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும்.

குழந்தைகளுக்கு கைப்பட்டை: குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு சாதாரண உடையில் 15 ஆண், பெண் காவலா்கள் 5 குழுக்களாக பிரிந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டறிய ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் ஆடைகள் மற்றும் பொருள்கள் வாங்க வருவோரின் குழந்தைகளுக்கு, அவா்களது பெயா் மற்றும் பெற்றோரின் கைப்பேசி எண் கொண்ட பிரத்யேக ‘டேக்’ (கைப்பட்டை) கை மணிக்கட்டில் கட்டப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில், கூடுதல் காவல் ஆணையா் என்.கண்ணன், இணை ஆணையா்கள் எம்.ஆா்.சிபி சக்கரவரத்தி, மகேஷ் குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் கடும் வெள்ளம்! தென்னை மரத்தில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் மீட்ட ராணுவம்!

வார பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!

விடியோவால் வந்த வினை! ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்ணை கண்டுபிடித்த ரயில்வே!

டிட்வா புயல்: பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்!

கர்நாடகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT