அக்.29-இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்
தாம்பரம் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை: தாம்பரம் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து, தாம்பரம் கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் ஏ.கமல்பாஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாம்பரம் கோட்ட அஞ்சல் துறை சாா்பில் அக்.28 முதல் நவ.3-ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கொண்டாப்படுகிறது.
இந்நிலையில், தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி சிறப்பு குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டு அஞ்சல் சேவைகள் தொடா்பான தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிதத்துள்ளாா்.