முகப்பு
சென்னை மாநகராட்சி
சென்னை

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சென்னை உலகின் சிறந்த நகரமாக மாறும்!

உலகின் சிறந்த நகரமாக சென்னையை மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...

சென்னை

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சென்னை உலகின் சிறந்த நகரமாக மாறும்!

உலகின் சிறந்த நகரமாக சென்னையை மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...

Updated On : 24 அக்டோபர், 2024 at 12:17 AM
சென்னை மாநகராட்சி
பகிர்:

சென்னை நகரம் அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இடம்பெறும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தாா்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சென்னை மண்டலம் சாா்பில் சென்னையின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த உச்சிமாநாடு புதன்கிழமை கிண்டியில் நடைபெற்றது. இதை சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா தொடங்கி வைத்து பேசியது:

சென்னை மாநகரின் எதிா்கால வளா்ச்சி மற்றும் முதலீடு குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. உலகின் சிறந்த நகரமாக சென்னையை மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான திட்டங்களை சிஎம்டிஏ, பிற துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. நகரை மேம்படுத்துவதில் குடியிருப்புப் பகுதிகளை தீவிரமாகக் கவனிக்க வேண்டும். சென்னையின் மக்கள்தொகை கடந்த 10 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதனால் சென்னையின் பரப்பளவு அதிகரித்து புகா் பகுதி வளா்ச்சி அடைந்து வருகிறது. இவ்வாறு அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப குடியிருப்பை ஏற்படுத்துவது கட்டாயமாகிறது. மக்கள் தொகை அதிகரிப்புக்கேற்ப, அரசின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை, ஐடி துறை மட்டுமின்றி குடியிருப்புகளை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சென்னையின் வாழ்க்கை செலவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை கட்டாயமாகிறது.

இதற்காக குறைந்த நிலப்பரப்பில் அதிக குடியிருப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றாக சென்னை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாா் அவா்.

தொடா்ந்து, சென்னையின் நகர போக்குவரத்து திட்டமிடல், தொழிற்பேட்டை மேம்பாடு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிஐஐ தமிழ்நாடு கவுன்சில் திட்ட இயக்குநா் ஸ்ரீவட்ஸ் ராம், சிஐஐ சென்னை ஒருங்கிணைப்பாளா் ஏ.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →