முகப்பு
சென்னை

தங்கம் விலையில் மாற்றமில்லை: பவுன் ரூ.53,352-க்கு விற்பனை

புதன்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ.53,352-க்கு விற்பனையானது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 10:15 PM
தங்கம் விலை (கோப்புப்படம்)
பகிர்:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ.53,352-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த புதன்கிழமை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.6,669-க்கும், பவுனுக்கு ரூ.8 குறைந்து ரூ.53,352-க்கும் விற்பனையான நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை எவ்விதமாற்றமுமின்றி கிராம் ரூ.6,669-க்கும், பவுன் ரூ.53,352-க்கும் விற்பனையானது.

அதேபோல், வெள்ளி விலையும் மாற்றமின்றி கிராம் ரூ.90-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.90,000-க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →