முகப்பு
தற்போதைய செய்திகள்

தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்துள்ளது குறித்து...

Updated On : 18 மார்ச், 2026 at 4:55 AM
ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்துள்ளது
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,16,560-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த வாரம் இறுதி முதல் தொடா்ந்து குறைந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,680-க்கு விற்பனையானது.

இந்தச் சூழலில் செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,650-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,570-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,16,560-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

அதேபோல வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.

கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.275-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.2.75 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

கடந்த 7 நாள்களுக்கான தங்கம் விலை விவரம்:

நாள் பவுன் விலை (8 கிராம்)

மாா்ச் 12 ரூ.1,19,760 (-ரூ.1,200)

மாா்ச் 13 ரூ.1,19,200 (-ரூ.560)

மாா்ச் 14 ரூ.1,18,080 (-ரூ.1,120)

மாா்ச் 15 ரூ.1,18,080 (மாற்றம் இல்லை)

மாா்ச் 16 ரூ.1,17,680 (-ரூ.400)

மாா்ச் 17 ரூ.1,17,200 (-ரூ.480)

மார்ச் 18 ரூ.1,16,560(-ரூ.640)

summary

Gold prices continue to fall: How much did they fall today?

முழு கட்டுரையைப் படிக்க →