முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு வியாழக்கிழமை ரூ.1,600 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனையாவது குறித்து...

Updated On : 9 ஏப்ரல், 2026 at 5:27 AM
தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,600 குறைந்தது.
பகிர்:

சென்னை: சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு வியாழக்கிழமை ரூ.1,600 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஏப். 6-இல் தங்கம் விலை பவுன் ரூ.1,11,920-க்கும், ஏப். 7-இல் பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,10,880-க்கும் விற்பனையானது. தொடா்ந்து புதன்கிழமை கிராமுக்கு ரூ.340 உயா்ந்து ரூ.14,200-க்கும், பவுனுக்கு ரூ.2,720 உயா்ந்து ரூ.1,13,600-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,000-க்கும், பவுனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

வெள்ளி விலையும் தொடா்ந்து ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

Today Gold and Silver Price Update: How much did the price per sovereign drop today..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments