முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு 640 உயர்ந்து ரூ.1,12,000-க்கு விற்பனையாவது குறித்து...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு 640 உயர்வு - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.1,440 குறைந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு 640 உயர்ந்து ரூ.1,12,000-க்கு விற்பனையாகிறது.

மேற்கு ஆசிய போா் பதற்றம் காரணமாக தங்கம் விலை தொடா்ந்து அதிரடியாக ஏறி, இறங்கி வருகிறது. கடந்த ஏப்.30-ஆம் தேதி பவுனுக்கு ரூ.1,600 உயா்ந்து ரூ.1,12,800-க்கு விற்பனையான நிலையில், மாதத்தின் முதல்நாளான வெள்ளிக்கிழமை (மே 1) காலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,050-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,400-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து வா்த்தகம் நிறைவடைவதுக்கு முன்பு கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.13,920-க்கும், பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,11,360-க்கும் விற்பனையானது. அதன்மூலம் ஒரே நாளில் கிராம் ரூ.180, பவுன் ரூ.1,440 விற்பனையானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

அதன்படி கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,000-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,000-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

Today Gold and Silver Prices Rise....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments