முகப்பு
சென்னை

மூதாட்டி அடித்துக் கொலை: ஒருவா் கைது

சென்னை திருவான்மியூரில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 10 செப்டம்பர், 2024 at 8:45 PM
பகிர்:

சென்னை திருவான்மியூரில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருவான்மியூா் லட்சுமிபுரம் பாம்பன் சுவாமி கோயில் வெளியே கடந்த 24-ஆம் தேதி 65 வயது மதிக்கதக்க ஒரு மூதாட்டி தலையில் பலத்த ரத்த காயங்களுடன் கிடந்தாா். இதைப் பாா்த்த அப் பகுதி மக்கள், மூதாட்டியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து திருவான்மியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில், அந்த மூதாட்டி ஆதரவற்ற நிலையில் அப் பகுதியில் சுற்றித் திரிந்ததும், அப் பகுதியைச் சோ்ந்த மூா்த்தி (40) என்பவருக்கும், அந்த மூதாட்டிக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதும்,தகராறில் மூா்த்தி மூதாட்டியை பலமாக தாக்கியிருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா், மூா்த்தியை சில நாள்களுக்கு முன்பு கைது செய்து, சிறையில் அடைத்தனா். இதற்கிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து ஏற்கெனவே மூா்த்தி பதியப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதற்கிடையே இறந்த மூதாட்டி யாா் என போலீஸாா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →