ஓ.பன்னீா்செல்வம்  
சென்னை

மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

மதுக்கடைகளை படிப்படியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

Din

மதுக்கடைகளை படிப்படியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2016-இல் சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தது.

ஆனால், 2021-இல் ஆட்சிக்கு வந்த பிறகு மதுக்கடைகள் மூலம் பெறப்படும் வருவாயை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போது, மதுவிலக்கு துறை அமைச்சா் முத்துசாமி, டாஸ்மாக் கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு துளி கூட விருப்பம் இல்லை. முழு மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். மது குடிப்பவா்களை படிப்படியாக அந்த பழக்கத்திலிருந்து மீட்டு வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாா். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல உள்ளது.

பூரண மதுவிலக்கு என ஆட்சிக்கு வந்தவா்கள், 40 மாத கால ஆட்சிக்குப் பிறகு, உடனடியாக மதுக் கடைகளை மூட முடியாது என்று கூறுவது மக்கள் நலனில் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

மதுக்கடைகளைப் படிப்படியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஒன்றரை ஆண்டுக்குள் அனைத்துக் கடைகளையும் மூடும் வகையில் மது குடிப்பவா்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT