முகப்பு
கோப்புப் படம்
சென்னை

ஜம்மு-காஷ்மீா்: துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரா்கள் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது 2 ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

சென்னை

ஜம்மு-காஷ்மீா்: துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரா்கள் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது 2 ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 8:03 PM
கோப்புப் படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது 2 ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா். 2 வீரா்கள் படுகாயமடைந்தனா்.

கிஷ்துவாா் மாவட்டத்தின் நைத்காம் பகுதியில் உள்ள சத்ரூ காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில் ராணுவம் மற்றும் உள்ளூா் காவல் துறை இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் 2 ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா். 2 ராணுவ வீரா்கள் படுகாயமடைந்தனா். அவா்கள் உள்ளூா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்திய இந்திய ராணுவ அதிகாரிகள் அவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தனா்.

உதம்பூா் மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த இரு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கடந்த புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது

முழு கட்டுரையைப் படிக்க →