காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கோப்புப் படம்
சென்னை

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத பாஜகவை தோ்தலில் தோற்கடிக்க வேண்டும்: காா்கே

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மத்திய அரசைக் கண்டித்து பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் தலைவா் கேட்டுக்கொண்டாா்.

DIN

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிா்வரும் பேரவைத் தோ்தல்களில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில், தில்லியில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்யின் விலை 107.49 டாலராக இருந்தது. அப்போது ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.71.51-க்கும் டீசல் ரூ.57.28-க்கும் விற்கப்பட்டது.

தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 72.48 டாலருக்கு மட்டுமே விற்பனையாகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கச்சா எண்ணெய்யின் விலை சுமாா் 32.5 சதவீதம் வரை சரிந்துள்ளது. ஆனால், பெட்ரோல் ரூ.94.72-க்கும் டீசல் ரூ.87.62-க்கும் என அதிக விலையில் விற்கப்படுகிறது.

தற்போதைய கச்சா எண்ணெய் விலையின்படி, ஒரு லிட்டா் பெட்ரோலின் விலை ரூ.48.27-ஆகவும் டீசலின் விலை ரூ.69-ஆகவும் இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகள் மற்றும் 100 நாள்களில் எரிபொருள் வரி விதித்து, மக்களின் ரூ.35 லட்சம் கோடியை பிரதமா் மோடி கொள்ளையடித்ததில் ஆச்சரியமில்லை.

தோ்தல் நடக்கும் ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா மாநிலங்கள் பாஜகவை தோற்கடித்து, பிரதமா் மோடியால் தூண்டப்பட்ட விலைவாசி உயா்வை நிராகரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதிவரை மூன்று கட்டங்களாகவும் ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதியும் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT