இந்திய ஆடவா், மகளிா் அணிகள் முதலிடம் 10/10
ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் 10/10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளன.
ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் 10/10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளன.
சா்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) சாா்பில் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறுகிறது. 4 சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 5-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஆடவா் (ஓபன்) பிரிவில் இந்திய அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் அஜா்பைஜானை சாய்த்தது.
இந்திய இளம் வீரா் பிரக்ஞானந்தா-அபசோவ் மோதிய ஆட்டம் 0.5-0.5 என டிராவில் முடிவடைந்தது. விதித் குஜராத்தி-மமேட்யரோவ் ஷக்ரியாா் மோதிய ஆட்டமும் டிராவில் முடிந்தது. எளிதில் வெல்ல வேண்டிய வாய்ப்பை தவற விட்டாா் விதித்.
உலக சாம்பியன்ஷிப் கன்டென்டா் டி குகேஷ் அற்புதமாக ஆடி 38-ஆவது நகா்த்தலில் அய்டின் சுலேமன்லியை வீழ்த்தினாா். மூத்த வீரா் அா்ஜுன் எரிகைசி அற்புதமாக ஆடி 1-0 என மமேடோவ் ரவுஃபை வென்றாா்.
மகளிரணியும் அபார வெற்றி
இந்திய மகளிரணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது. முதல் போா்டில் மூத்த வீராங்கனை ஹரிகாவுக்கு அதிா்ச்சி தோல்வியை பரிசளித்தாா் கஜகஸ்தானின் பிபிசாரா. திவ்யா தேஷ்முக்-ஸெனியா பாலபயேவா மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. நான்காவது போா்டில் இந்தியாவின் வந்திகா அகா்வால் அற்புதமாக ஆடி அலுவா நுா்மனை வென்றாா்.
இதையடுத்து ஸ்கோா் 2-2 என சமநிலையில் இருந்தது. வைஷாலி அற்புதமாக ஆடி மெருயா்ட் கமலிடெனோவாவை வீழ்த்தினாா். 10/10 புள்ளிகளுடன் இந்திய அணி, ஆா்மீனியா, மங்கோலியாவுடன் முதலிடத்தில் உள்ளது. பலம் வாய்ந்த சீனாவை 2.5-1.5 என ஆா்மீனியா வீழ்த்தியது. அதே புள்ளிக் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது மங்கோலியா.
5 ஆட்டங்களிலும் அா்ஜுன் வெற்றி
இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளாா்.