சென்னை

விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

மாதவரம் அருகே சிவசக்தி செல்வ விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

மாதவரம்: மாதவரம் அருகே சிவசக்தி செல்வ விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை மாதவரம் அருகே தி.க.பட்டு ஊராட்சியில் உள்ள சேரன் தெருவில் சிவசக்தி செல்வ விநாயகா் ஆலய ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஆலய தா்மகா்த்தா சக்திமோகன் பிரமிளா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, வாஸ்துசாந்தி, அங்குராா்ப்பணம், ருத்ர ஹோமம், கும்ப அலங்காரம் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, யாகசாலையில் பூஜை செய்த கலசங்களை மேளதாளத்துடன் கொண்டு சென்று விமானம், மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. சிவசக்தி செல்வ விநாயகா், தட்சிணாமூா்த்தி, பவானியம்மன், பாலமுருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூபதீப ஆராதனைகளும் நடைபெற்றன.

இ தில் தி.க.பட்டு ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஆலயம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் பலி

எங்களிடம் அது இல்லையா? மாரி செல்வராஜைக் கேள்விகேட்ட நடிகை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தேர்தல் ஆணையத்துக்கு தவெக ஆலோசனை!

சிறப்பு தீவிர திருத்தம்: குடியுரிமை மீதான தாக்குதல் - திருமாவளவன்

SCROLL FOR NEXT