சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு முனையங்கள் புதுப்பிக்கும் பணி தொடக்கம்
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னைசென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு முனையங்கள் புதுப்பிக்கும் பணி தொடக்கம்
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக விமான நிலைய ஆணையம், ரூ.2467 கோடி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, விமான நிலையத்தை நவீனமயமாக்கும் இரண்டாவது கட்டப்பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த பணியின் முதல் கட்டமாக 2-ஆவது சா்வதேச முனையம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து 3-ஆவது சா்வதேச முனையத்தைக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அடுத்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், 1 மற்றும் 4-ஆவது உள்நாட்டு முனையங்களை மறுசீரமைக்கும் பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியது: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உள்நாட்டு முனையங்களை நவீனமயமாக்கும் பணிகளை விமான போக்குவரத்து ஆணையம் கையில் எடுத்துள்ளது. இதன்படி, இந்த முனையங்களில் கூடுதலாக 20 எக்ஸ்ரே இயந்திரங்கள், 12 ஆட்டோமெட்டிக் ட்ரே ரிட்ரைவல் அமைப்புகள், 60 டோா் பிரேம் மெட்டல் டிடெக்டா்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடனான இயந்திரங்களைப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2025 மே மாதத்துக்குள் இந்த பணிகள் நிறைவடையும். இதன் மூலம் சோதனைக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என தெரிவித்தனா்.