இரு தியேட்டர்களுக்கு சீல் படம்: எக்ஸ்
சென்னை

சென்னையில் முன்னாள் எம்எல்ஏவின் இரு தியேட்டர்களுக்கு சீல்!

சென்னையில் இரண்டு தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது பற்றி...

Ravivarma.s

சென்னையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இரண்டு தியேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ரூ. 60 லட்சம் சொத்து வரி செலுத்தாமல் இருந்ததால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தியேட்டர்களுக்கு சீல்

சென்னை நங்கநல்லூர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பிரபலமான திரையரங்குகள் வெற்றிவேல் மற்றும் வேலன்.

கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி வரியை உயர்த்திய நிலையில், இரு தியேட்டர்களுக்கும் வரி அதிகமாக இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையில் வரியை கட்ட தியேட்டர் உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை: சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடல் மீட்பு!

இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக ரூ. 60 லட்சம் வரியை கட்டாமல் தியேட்டர் உரிமையாளர் நிலுவையில் வைத்துள்ளார். பலமுறை வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியும், எந்த பதிலும் அனுப்பவில்லை.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை தியேட்டருக்குச் சென்று ஊழியர்களை வெளியேற்றி சீல் வைத்துச் சென்றனர்.

பலத்த பாதுகாப்பு

இரண்டு தியேட்டர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதால், இன்றைய காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள், தியேட்டரில் பிரச்னை செய்ய வாய்ப்புள்ளதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT