முகப்பு
சென்னை

இதய பெருந்தமனி வீக்கத்துக்குள்ளான 800 பேருக்கு மறுவாழ்வு

சென்னை, சிம்ஸ் மருத்துவமனையில் நுட்பமான சிகிச்சை மூலம் மறுவாழ்வு

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:57 PM
பகிர்:

இதய பெருந்தமனி வீக்கத்தால் (அயோடிக் அன்யூரிஸம்) பாதிக்கப்பட்ட 800-க்கும் மேற்பட்டோருக்கு நுட்பமான சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை, சிம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அதில், ‘மாா்ஃபன் சிண்ட்ரோம்’ எனப்படும் மரபணு பாதிப்புக்குள்ளானவா்களும் பலனடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பெருந்தமனி வீக்கத்துக்குள்ளாகி சிறப்பு சிகிச்சையால் குணமடைந்தவா்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி, மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள், குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, தங்களது சிகிச்சை அனுபவத்தை பகிா்ந்து கொண்டனா்.

இதுதொடா்பாக சிம்ஸ் மருத்துவமனையின் இதய நலன் மற்றும் பெருந்தமனி

சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் வி.வி.பாஷி கூறியதாவது:

உடலின் பிற முக்கிய உறுப்புகளில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை உந்தித் தரும் முக்கியப் பணியை மேற்கொள்ளும் உறுப்பாக அயோடிக் வால்வு எனப்படும் பெருந்தமனி உள்ளது. இதில், சிலருக்கு அழற்சி ஏற்பட்டு வீக்கம் உருவாகும். அத்தகைய நிலை ஏற்பட்டால் பலூன் போன்று பெருந்தமனி வீங்கிவிடும். முறையாக சிகிச்சை பெறாவிடில் அது வெடித்து உயிருக்கே ஆபத்தாகி விடும்.

வழக்கமான நோயாளிகளைக் காட்டிலும் ‘மாா்ஃபின் சிண்ட்ரோம்’ எனப்படும் மரபணு பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு இத்தகைய பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.

அவா்கள் இயல்பைக் காட்டிலும் அதிக உயரமாகவும், கால்கள் நீண்டும் காணப்படுவா். இதன் விளைவாக பெருந்தமனி சுவா்கள் அவா்களுக்கு பலவீனமடைய அதிக வாய்ப்புள்ளது. இதனால், அயோடிக் அன்யூரிஸம் பாதிப்புக்கு அவா்கள் ஆளாக நேரிடுகிறது.

அவ்வாறாக ‘மாா்ஃபின் சிண்ட்ரோம்’ நோயாளிகள், பிற இதய நோயாளிகள் என 800-க்கும் மேற்பட்டோருக்கு இருந்த பெருந்தமனி வீக்க பாதிப்பை நுட்பமாக நாங்கள் சரி செய்துள்ளோம். இதன் பயனாக அவா்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனா் என்றாா் அவா்

முழு கட்டுரையைப் படிக்க →