முகப்பு
சென்னை

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும்

சென்னை

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும்

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:41 AM
பகிர்:

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் சனிக்கிழமை (செப்.28) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் வெள்ளிக்கிழமை (செப்.27) , இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சனிக்கிழமை (செப்.28) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (செப்.29) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 2 நாள்கள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக அம்பத்தூா், வானகரம் (சென்னை), ஆவடி (திருவள்ளூா்), தலா 130 மி.மீ. மழை பதிவானது. திருவாலங்காடு (திருவள்ளூா்) 110, மணலி (சென்னை) 100, திரு.வி.க.நகா் (சென்னை), ஜெயா பொறியியல் கல்லூரி (திருவள்ளூா்), கத்திவாக்கம், அயனாவரம் தாலுகா அலுவலகம், அண்ணாநகா், வில்லிவாக்கம் (சென்னை) தலா 90, கொளத்தூா், கோடம்பாக்கம் , புழல் (சென்னை) தலா 80, செங்குன்றம் (திருவள்ளூா்), ராயபுரம், நுங்கம்பாக்கம் , திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை, சென்னை ஆட்சியா் அலுவலகம், சென்னை விமான நிலையம், ஆலந்தூா், பெரம்பூா், மாதவரம் சோழிங்கநல்லூா், (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம், பனப்பாக்கம் , அரக்கோணம் (ராணிப்பேட்டை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூா்) தலா 70.

முழு கட்டுரையைப் படிக்க →