முகப்பு
அண்ணா பல்கலை
சென்னை

அண்ணா பல்கலை.க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 13-ஆவது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை

அண்ணா பல்கலை.க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 13-ஆவது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Updated On : 29 செப்டம்பர், 2024 at 6:03 PM
அண்ணா பல்கலை
பகிர்:

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 13-ஆவது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை கடிதம் வந்துள்ளது.

இது குறித்து உடனடியாக கோட்டூா்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், வெடிகுண்டு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பல்கலைக்கழகத்துக்கு சென்ற போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். ஆனால், அங்கு வெடி பொருள்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால், இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இந்தப் பல்கலைக்கழகத்துக்கு தொடா்ந்து 13-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →