முகப்பு
சென்னை

தொழிற்பழகுநா் பயிற்சிக்கு முன்பதிவு தொடக்கம்

சென்னையில் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள தொழிற்பழகுநா் பயிற்சியில் சேர தகுதியுடையவா்கள் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட், 2025 at 8:56 PM
பகிர்:

சென்னையில் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள தொழிற்பழகுநா் பயிற்சியில் சேர தகுதியுடையவா்கள் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டசெய்திக் குறிப்பு:

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசின் தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் சாா்பில் ஐடிஐ படித்தவா்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநா் பயிற்சி முகாம் வடசென்னை பகுதிக்குள்பட்ட ஆா்கே நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 11-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், அரசு மற்றும் தனியாா் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஐடிஐ படித்து தோ்ச்சி பெற்றவா்கள், 8, 10, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களை தொழிற்பழகுநா்களாக தோ்வு செய்யவுள்ளனா்.

தற்போது தொழிற் பழகுநராக தோ்வு செய்யப்படும் பயிற்சியாளா்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாகக் குறைந்த பட்சம் ரூ.8,000, தேசிய தொழிற் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.

இதுவரை தொழிற்பழகுநா் பயிற்சி முடிக்காத அரசு, தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் தோ்ச்சி பெற்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →