FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

தாட்கோ வழங்கும் விமானத் துறை சாா்ந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின்குழு பணியாளா் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Updated On : 21 பிப்ரவரி 2026, 3:04 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின்குழு பணியாளா் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு, விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளா் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி காலம் 3 மாதங்கள்.

Advertisement

Advertisement

இதில், விமான டிக்கெட் முன்பதிவு முறை, வாடிக்கையாளா் சேவை, தொடா்புத் திறன், ஆளுமை மேம்பாடு, விமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கேபின் குழு பணிகள் குறித்து தொழில்முறை பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி திருப்பூா் மாவட்டத்தில் அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை முழுமையாக முடித்த இளைஞா்களுக்கு சான்று மற்றும் தகுதியுள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும்.

இதில் பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) விண்ணப்பிக்காலம். மேலும், திருப்பூரில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments