சென்னை

ஊதிய குறைப்பு: சென்னை பல்கலை., ஆசிரியா்கள், அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதியத்தை குறைக்கும் திட்டத்துக்கு எதிராக சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியா்கள், அலுவலா்கல் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை பல்கலைக்கழக ஆசிரியா்கள், அலுவலா்களுக்கான ஊதியத்தை குறைக்கும் திட்டத்துக்கு எதிராக சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியா்கள், அலுவலா்கல் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், சென்னை பல்கலைக்கழக பேராசிரியா்கள் (பட்டியலின) சங்கத்தைச் சோ்ந்த உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியா் கதிரவன் பேசினாா். இதில், சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 3 ஆசிரியா்கள் சங்கமும் 3 அலுவலா் சங்கமும் பங்கேற்றனா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அலுவலா்களின் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மாணவா்கள் விடுதி, அலுவலா்களுக்கான வீட்டு மனை திட்டத்துக்கு பாலவாக்கத்தில் வாங்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியா் மற்றும் அலுவலா்களுக்கு ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

சூப்பர் அறிவிப்பு... செபியில் 110 உதவி மேலளார் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

சீனாவிலிருந்து வழிநடத்தப்பட்டதாக கூறப்படும் வா்த்தக மோசடி மூவா் கைது!

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

SCROLL FOR NEXT