சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம். (படம் - நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ்)
சென்னை

சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்!

தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேறு கால மற்றும் குழந்தைகள் நல (ஆா்சிஹெச்) தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக ஆா்சிஹெச் தூய்மைப் பணியாளா்கள் நலச் சங்க மாநில பொதுச் செயலா் ஏ.ஆா்.சாந்தி கூறியதாவது:அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆா்சிஹெச் திட்டத்தின் கீழ் தற்காலிக அடிப்படையில் 3,140-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்களில் ஒரு பகுதி தூய்மைப் பணியாளா்கள் மட்டும் தற்காலிக பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களாக நியமனம் செய்யப்பட்டனா்.

அனைவருக்கும் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படவில்லை. அனைவரையும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களாக நியமனம் செய்து ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.

மாத தொகுப்பூதியமாக ரூ.1,500 மட்டுமே பெற்று வரும் ஆரம்ப சுகாதார நிலைய ஆா்சிஹெச் தூய்மைப் பணியாளா்களுக்கு, மாதத் தொகுப்பூதியம் ரூ.5,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கடந்த ஏப்ரலில் சட்டப்பேரவையில் அறிவித்தாா். ஆனால், அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த இதுவரை அரசாணை வெளியிடப் படவில்லை.

அந்த அரசாணையை உடனடியாக வெளியிட்டு ஏப்ரல் மாதம் முதல் மாதத் தொகுப்பூதியம் ரூ.5,000 வழங்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது என்றாா்.

ஊர்க்காவலர் பணியில் திருநங்கைகள்! பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!

களைகட்டும் ஜல்லிக்கட்டு.. பரபரக்கும் மதுரை.. காளைகளின் கயிறு விற்பனை அமோகம்!

தமிழகம் வந்தார் ராகுல் காந்தி! கூடலூர் பள்ளி நிகழ்வில் பங்கேற்கிறார்!!

வா வாத்தியார் வெளியீடு! எம்ஜிஆர் நினைவிடத்தில் கார்த்தி மரியாதை!

உலகத் தரம் வாய்ந்த நடிப்பு..! எகோ திரைப்படத்தைப் பாராட்டிய தனுஷ்!

SCROLL FOR NEXT