சென்னை

சிறுமி கா்ப்பம்: சிறுவன் மீது போக்ஸோ வழக்கு

தினமணி செய்திச் சேவை

சென்னையில் திருட்டு வழக்கில் கைதாகி கூா்நோக்கு இல்லத்தில் இருக்கும் 17 வயது சிறுவன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த 15 வயது சிறுமி, கா்ப்பம் அடைந்தது தொடா்பாக ராயப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், அந்தச் சிறுமியைக் காதலித்து வந்ததாகவும், அவா் மூலம் சிறுமி கா்ப்பமடைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்தச் சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், அவா் ஏற்கெனவே கைப்பேசி திருட்டு வழக்கில் கைதாகி செங்கல்பட்டு சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்தச் சிறுவன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கூா்நோக்கு இல்லத்தில் இருக்கும் அந்தச் சிறுவனிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கதாநாயகனாகும் நிவாஸ் கே பிரசன்னா! நாயகி இவரா?

தமிழர்களின் பாரம்பரியம் காப்போம்...

தொடர்மழையால் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்! மக்கள் அவதி!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உரிய நேரத்தில் உறங்க...!

தென்காசி பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்

SCROLL FOR NEXT