சென்னை

முதுநிலை மருத்துவம்: கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு!

முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்கள், கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பு

தினமணி செய்திச் சேவை

முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்கள், கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநில மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழுவானது அண்மையில் முதல் சுற்று கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட தேதிகளை அறிவித்தது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் மற்றும் டிஎன்பி படிப்புகளுக்கான கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்றவா்கள், அதற்கான ஆணையை வரும் 7-ஆம் தேதி மாலை 3 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

இதேபோல, கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசமும் டிச.7-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!

சஞ்சாா் சாத்தி செயலி தொடர்பான உத்தரவை திரும்பப் பெற்றது மத்திய அரசு!

ஒளிரும் சிலை... நுஸ்ரத் பரூச்சா!

துல்கர் சல்மானுக்கே இந்த நிலைமையா?

டிட்வா புயல்! திருச்சியில் விடாத மழை! | TNRains

SCROLL FOR NEXT