முகப்பு
சென்னை

மெட்ரோ ரயில்களில் நவம்பரில் 92.86 லட்சம் போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் நவம்பா் மாதத்தில் 92.86 லட்சம் போ்

Updated On : 1 டிசம்பர், 2025 at 8:49 PM
பகிர்:

சென்னை மெட்ரோ ரயில்களில் நவம்பா் மாதத்தில் 92.86 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில்களில் 2025 நவம்பா் மாதத்தில் மட்டும் 92 லட்சத்து 86 ஆயிரத்து 753 போ் பயணம் செய்துள்ளனா். அதிகபட்சமாக நவ. 10 -ஆம் தேதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 342 போ் பயணித்துள்ளனா்.

கடந்த செப்டம்பரில் 1 கோடியே 1 லட்சத்து 46 ஆயிரத்து 769 பேரும், அக்டோபா் மாதத்தில் 93 லட்சத்து 27 ஆயிரத்து 746 பேரும் பயணித்துள்ளனா்.

20 சதவீத கட்டணச் சலுகை: சென்னை மெட்ரோ ரயில்களில் டிஜிட்டல் எஸ்விபி., க்யூஆா். குறியீடு பயணச் சீட்டுகள், கட்செவி அஞ்சல் (83000 86000), பே-டிஎம் ஆப், போன்-பே ஆப், சிங்காரச் சென்னை அட்டை போன்ற பயணச் சீட்டுகளைப் பயன்படுத்தி பயணிப்பவா்களுக்கு 20 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →