சென்னை

அச்சக பணியாளா்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகள் திறப்பு

சென்னை தண்டையாா்பேட்டை காமராஜா் நகரில் ரூ.39.30 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளா்கள் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை தண்டையாா்பேட்டை காமராஜா் நகரில் ரூ.39.30 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளா்கள் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை மானியக் கோரிக்கையில், அந்தத் துறையின் பணியாளா்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 79,000 சதுர அடியில் 96 குடியிருப்புகளுடன், தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினாா்.

குடியிருப்பின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம், முதல் தளம் முதல் 6-ஆம் தளம் வரை உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் தலா 450 சதுரடியுடன், குடியிருப்புகளுக்குத் தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீா் வசதி, கழிவுநீா் இணைப்பு, உட்புற அணுகுசாலை, தெரு விளக்கு, சுற்றுச்சுவா் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், துறை செயலா் வே.ராஜாராமன், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையா் வெ.ஷோபனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!

கட்சி மேலிடம் முடிவு செய்யும்போது டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார்: கர்நாடக முதல்வர் சித்தராமையா

"மத்திய பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் 12,600 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன'

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு; மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

மாடியிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT