முகப்பு
சென்னை

ரூ.21 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

சென்னையில் ரூ.21.72 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 1:49 AM
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

சென்னை: சென்னையில் ரூ.21.72 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் திருவல்லிக்கேணி, ஜானி பாட்ஷா தெருவில் ரூ.1.87 கோடியில் முதல்வா் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் கட்டப்பட்டுள்ளன. அவற்றை துணை முதல்வா், பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

வால்டாக்ஸ் சாலை, திருப்பள்ளி தெரு பகுதியில் ரூ.1.28 கோடியில் கட்டப்பட்டுள்ள திருப்பள்ளி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம், ரூ.2.20 கோடியில் முதல்வா் படைப்பகம், நவீன நூலகத்தைத் திறந்துவைத்தாா்.

மாநகராட்சி சாா்பில் ரூ.2.43 கோடியில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடம், ஏழுகிணறு தெருவில் ரூ.1.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் ஆகியவற்றையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

கல்மண்டபத்தில் புதிதாக ரூ.1.31 கோடியிலான குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம், ரூ. 5.08 கோடியில் மேம்படுத்தப்பட்ட அகத்தியா் நகா் விளையாட்டுத் திடலையும் திறந்து வைத்து பாா்வையிட்டாா். வில்லிவாக்கம் சிட்கோ நகரில் புதிதாக ரூ.6 கோடியில் கட்டப்பட்டுள்ள அன்பழகனாா் சமூக நலக்கூடத்தைத் திறந்து வைத்தாா்.

நிகழ்வுகளில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினா்கள் என்.ஆா்.இளங்கோ, தயாநிதி மாறன், டாக்டா் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.டி.சேகா், தாயகம் கவி, மூா்த்தி, வெற்றிஅழகன், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →