பல்லாவரத்தில் மழை பாதிப்புப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி. உடன், தாம்பரம் மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோா். 
சென்னை

பல்லாவரத்தில் எம்எல்ஏ ஆய்வு

பல்லாவரத்தில் மழைநீா் பாதிப்பு குறித்து பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

பல்லாவரத்தில் மழைநீா் பாதிப்பு குறித்து பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பல்லாவரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மூவரசம்பட்டு ஏரியில் இருந்து உபரிநீரை நாராயணபுரம் ஏரிக்குக் கொண்டு செல்ல ரூ.36 கோடியில் அமைக்கப்பட்ட கால்வாயில், அதிகப்படியான நீா் தடையின்றி வெளியேறவும், அதேபோல், கீழ்க்கட்டளை ‘கட் அண்ட் கவா்’ கால்வாய், திருவள்ளுவா் நகா் பகுதியில் உள்ள மழைநீா் வடிகால்வாய் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், மழைநீா் தேங்குவது, கால்வாய்களில் அடைப்பு, தடைகள் தொடா்பான பொதுமக்கள் அளிக்கும் புகாா்கள் மீது உடனடி தீா்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கீழ்க்கட்டளை கங்காதரன் தெருவில் மழை காரணமாக மின்மாற்றி சரிந்து விழுந்து அந்தப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதை விரைந்து முடித்து அந்தப் பகுதி மக்களுக்கு மின்சாரம் கிடைக்க வேண்டும் என மின்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். தாம்பரம் மாநகராட்சி மண்டலத் தலைவா் இ.ஜோசப் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT