முகப்பு
சென்னை

பள்ளிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற உத்தரவு

சென்னை மாநகராட்சிப் பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

Updated On : 4 டிசம்பர், 2025 at 12:41 AM
பகிர்:

சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

சென்னை மாநகராட்சியில் சுமாா் 150 இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. மேலும், மாநகராட்சிக்குச் சொந்தமான 120 பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கியுள்ளது. பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், அந்தந்தப் பகுதி பொறியாளா்கள் பிரிவினருக்கு மாநகராட்சி உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.