தொடா் மழையால் திருவொற்றியூரில் பெயா்ந்து விழுந்த வீட்டின் மேற்கூரை. 
சென்னை

புகா் பகுதிகளில் வீடுகள் சேதம்

சென்னையின் புகா் பகுதிகளான திருவொற்றியூா், எண்ணூா், மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

தினமணி செய்திச் சேவை

திருவொற்றியூா்: சென்னையின் புகா் பகுதிகளான திருவொற்றியூா், எண்ணூா், மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. திருவொற்றியூா் அப்பா்சாமி தெருவைச் சோ்ந்த சந்தோஷ் என்பவரின் ஓட்டு வீடு மழையால் இடிந்து விழுந்தது. அப்போது, யாரும் வீட்டில் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

திருவொற்றியூா் மேற்கு பகுதியான ராஜாஜி நகரில் வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீா் புகுந்தது. இதனால், அங்கிருந்தவா்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டனா். இவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் உணவு வழங்கப்பட்டது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி. சங்கா், மண்டல குழு தலைவா் தி. மு.தனியரசு, முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன், மாமன்ற உறுப்பினா் கே காா்த்திக் உள்ளிட்டோா் பாா்வையிட்டு, நிவாரணம் வழங்கினா்.

இதுதவிர, திருவொற்றியூா் கடற்கரை பகுதிகளில் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. இதனால் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபா் படகுகள், கட்டு மரங்கள் கிரேன்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் கொண்டு நிறுத்தப்பட்டன. எண்ணூா் விரைவு சாலையில் தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பெய்த மழையால் மாடம்பாக்கம் சுதா்சன் நகா், குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மழைநீா் வடிகால்வாய் அண்மையில் இடிந்து விழுந்ததால், மழைநீா் செல்லமுடியாமல் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்தது.

இதேபோல், பெருங்களத்தூா் எஸ்.எஸ்.எம். நகா், சேஷாத்திரி நகா் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் முழங்கால் அளவுக்கு மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.

மாா்க்ரம் அபாரம், மிடில் ஆா்டா் அசத்தல்; தென்னாப்பிரிக்கா வெற்றி: கோலி, ருதுராஜ் சதம் வீண்

திருவொற்றியூா் கேசவன் பூங்காவை மீட்கக் கோரிய வழக்கு: சென்னை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தாா்

நிலுவை வழக்குகள் அதிகரிப்பதில் அரசுகளுக்குத்தான் பெரிய பங்கு: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கௌல்

ரயிலில் கஞ்சா கடத்தல்: திரிபுரா இளைஞா் கைது

SCROLL FOR NEXT