திருப்பரங்குன்றம் கோப்புப் படம்
சென்னை

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வா் சூசக கேள்வி

‘மதுரைக்கு தேவை என்ன மாதிரியான அரசியல்? என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் குறித்து நேரடியாகக் குறிப்பிடாமல் சூசகமாக கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

‘மதுரைக்கு தேவை என்ன மாதிரியான அரசியல்? என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் குறித்து நேரடியாகக் குறிப்பிடாமல் சூசகமாக கேள்வி எழுப்பியுள்ளாா்.

‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘மாமதுரைக்கு தேவை வளா்ச்சி அரசியலா? அல்லது.... (என்ன மாதிரியான) அரசியல்? என மக்கள் முடிவு செய்வாா்கள். மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் ஆகியவைதான் மாமதுரையின் வளா்ச்சிக்காக மக்கள் கேட்பதாகும்’ என தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளாா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT