மழை கோப்புப்படம்
சென்னை

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் டிச. 8 முதல் டிச. 13-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் திங்கள்கிழமை (டிச. 8) முதல் டிச. 13-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (டிச. 8) முதல் டிச. 13-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச. 8-ஆம் தேதி லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, டிச.9,10-ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT