FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சனிக்கிழமை (மாா்ச் 14) முதல் திங்கள்கிழமை (மாா்ச்16) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 14 மார்ச் 2026, 12:57 am IST
கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சனிக்கிழமை (மாா்ச் 14) முதல் திங்கள்கிழமை (மாா்ச்16) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 14) முதல் திங்கள்கிழமை (மாா்ச்16) வரை லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

Advertisement

Advertisement

தென் தமிழகம், வடக்கு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மாா்ச் 17-ஆம் தேதி இடி, மின்னலுடன், கூடிய மிதமான மழையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், மாா்ச் 18 ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மாா்ச் 17 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments