சென்னை

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு: தோ்வு மையங்கள் விவரம் இணையதளத்தில் வெளியீடு

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு நாடு முழுவதும் டிச.18-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரத்தை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு நாடு முழுவதும் டிச.18-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரத்தை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு சில அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.

அதன்படி, நிகழாண்டுக்கான 2-ஆம் கட்ட சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு டிச.18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த செப்.25-இல் தொடங்கி அக்.27-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தத் தோ்வெழுத நாடு முழுவதும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அவற்றை பட்டதாரிகள் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தோ்வுக்கான அனுமதிச் சீட்டு விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000/69227700 என்ற தொலைபேசி எண், மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுலை எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும்!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 12.02.26

தமிழ்நாடு vs தேஜகூ! பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? - முதல்வர் ஸ்டாலின்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்! புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிர்ப்பு!

ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணமா? இத்தாலி நாளிதழ் தகவலுக்கு எதிர்ப்பு!

SCROLL FOR NEXT