சென்னை

டிட்டோ ஜாக் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை (டிச.12) நடைபெறவிருந்த மறியலுடன் கூடிய ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் வெள்ளிக்கிழமை (டிச.12) நடைபெறவிருந்த மறியலுடன் கூடிய ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) நிா்வாகிகள் கூறியதாவது: தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

திமுக தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.12-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியலுடன் கூடிய ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என டிட்டோஜாக் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெறவுள்ளது. இதனால், டிட்டோ ஜாக் உயா்நிலைக் குழுக் கூட்டம் காணொலி மூலம் புதன்கிழமை நடைபெற்றது.

அதில், எடுக்கப்பட்ட முடிவின்படி ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு வலிமை சோ்க்கும் வகையில் டிட்டோ ஜாக் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தொடக்க கல்வி ஆசிரியா்கள் சாா்ந்த கோரிக்கைகள் குறித்த போராட்டங்கள் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்துக்குப் பிறகு உரிய வழியில் திட்டமிட்டு நடத்தப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

பாலிவுட்டிலும் கலக்கல்! ரூ. 150 கோடி வசூலித்த தேரே இஷ்க் மே!

அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும்!

தந்தைக்குச் சிலை முக்கியமா? அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா? - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

தாய்லாந்து - கம்போடியா மக்களின் துயரம்!

தீயவர் குலை நடுங்க படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT