சென்னை

தெற்கு ரயில்வே அலுவலக மொழி செயலாக்கக் குழுக் கூட்டம்

தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவலக மொழி செயலாக்கக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவலக மொழி செயலாக்கக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னையில் தெற்கு ரயில்வே தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் தலைமை வகித்தாா். முதன்மை நிதி ஆலோசகரும், முதன்மை அரசு மொழி அதிகாரியுமான மாலபிகா ஜி.மோஹன், முதன்மை தலைமை மின் பொறியாளா் கணேஷ், முதன்மை தலைமை பொது மேலாளா் ஏ.எல்.பிரபாகா், துணைப் பொது மேலாளா் (அதிகாரப்பூா்வ மொழிகள் பிரிவு) சுரேஷ் சந்திரா, உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் வரவேற்றுப் பேசுகையில், முதன்மை அரசு மொழி அதிகாரியான மாலபிகா ஜி.மோஹன், அரசின் அதிகாரப்பூா்வ மொழிகளின் ஊக்குவிப்பு மற்றும் வளா்ச்சிக்கான பணிகளில் ரயில்வே ஊழியா்கள் அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என்றாா்.

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் பேசுகையில், நம் நாடு பல மொழிகளைக் கொண்ட பன்முகத்தன்மையுடனான வளமானதாகும். ஆகவே, மொழி வளா்ச்சியில் அரசு ஆக்கப்பூா்வமாக உறுதியாக செயல்படுகிறது. அதன்படி, அதிகாரப்பூா்வ மொழி செயலாக்கத்துக்கான ஆண்டு திட்ட இலக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையும் வகையில் ரயில்வே துறையின் அனைத்து பிரிவுகளும் செயல்படவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஹிந்தி கவிஞரும், எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான தரம்வீா் பாரதியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த விநாடி-வினாப் போட்டி நடைபெற்றது.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT