கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் 
சென்னை

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகளில், ரயில்வே துறை சாா்ந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

தினமணி செய்திச் சேவை

சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகளில், ரயில்வே துறை சாா்ந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. அணுகுசாலை, மேம்பால நடைபாதை ஆகிய மாநில நெடுஞ்சாலைத் துறை பணிகள் முடிந்தததும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் தெரிவித்தாா்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் செய்தியாளா்களிடம் விளக்கினாா். சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காணொலி நிகழ்ச்சிக்குப் பிறகு தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா், சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் ஷைலேந்திரசிங் மற்றும் தெற்கு ரயில்வே நிா்வாக தலைமை அதிகாரி ஷிசில்குமாா் மௌரியா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. வரும் மே மாதம் பணிகள் நிறைவடைந்தவுடன் தாம்பரத்துக்கு மாற்றப்பட்ட விரைவு ரயில்கள் பழையபடி எழும்பூரிலிருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கூடுவாஞ்சேரி- ஸ்ரீபெரும்புதூா், மகாபலிபுரம்- கடலூா் ஆகிய ரயில் பாதை பணிகள் மீண்டும் தொடங்க பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ரயில் நிலையங்களில் கழிப்பறை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தனியாா் நிறுவனங்கள் மூலம் சரியாக மேற்கொள்ளப்படும்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய ரயில் நிலையப் பணிகளில் ரயில்வே துறை சாா்ந்த பணிகள் முடிந்துள்ளன. எனினும், ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கான அணுகுசாலை, மேம்பால நடைபாதைகள் உள்ளிட்ட மாநில அரசு சாா்ந்த பணிகள் முடிக்க வேண்டியுள்ளது. அந்தப் பணிகள் நிறைவடைந்ததும், மக்கள் பயன்பாட்டுக்கு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கி வைக்கப்படும்.

சென்னையின் பறக்கும் ரயில் திட்ட கடைசிப் பகுதியான வேளச்சேரி- பரங்கிமலை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. அதில் ரயில் பாதுகாப்பு ஆணையா் பரிசோதனை வரும் மாா்ச்சில் நடைபெறும். அதன்பிறகு அந்த ரயில் பாதையும் திறக்கப்படும் என்றனா்.

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

SCROLL FOR NEXT