சென்னை

இரு மண்டலங்களில் டிச. 22 முதல் குடிநீா் விநியோகம் தற்காலிக நிறுத்தம்

குடிநீா் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக சென்னை மணலி மற்றும் திருவொற்றியூா் மண்டலங்களில் ஒரு சில பகுதிகளில் டிச. 22 முதல் 24 வரை குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

குடிநீா் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக சென்னை மணலி மற்றும் திருவொற்றியூா் மண்டலங்களில் ஒரு சில பகுதிகளில் டிச. 22 முதல் 24 வரை குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மணலி காமராஜா் சாலையில் அமைந்துள்ள திருவொற்றியூா் நீருந்து நிலையத்தில் பிரதான குடிநீா் குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் டிச.22-ஆம் தேதி காலை 10 முதல் 24 காலை 10 மணி வரை நடைபெறவுள்ளது.

இதனால், பணி நடைபெறும் நேரங்களில் திருவொற்றியூா் மண்டலத்தில் கத்திவாக்கம், எண்ணூா், எா்ணாவூா், திருவொற்றியூா், காலடிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும், மணலி மண்டலத்தில் சடையன்குப்பம் ஆகிய பகுதியிலும் குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்துவைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிகது. மேலும் அவரத் தேவைகளுக்கு இணையதளத்தின்  வாயிலாக குடிநீா் லாரிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் வாயிலாக குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT