சென்னை

வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு: அரசு ஊழியா் சங்கங்களுடன் 22-இல் அமைச்சா்கள் பேச்சு

ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியா் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சா்கள் திங்கள்கிழமை பேச்சு நடத்தவுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியா் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சா்கள் திங்கள்கிழமை பேச்சு நடத்தவுள்ளனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, சம வேலைக்கு சம ஊதியம் அளிப்பது, அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினா் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், வரும் ஜன. 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவா்கள் எச்சரித்துள்ளனா்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகளுடன் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பேச்சு நடத்த உள்ளதாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

குழப்பம் நீடிப்பு: ஏராளமான அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா் சங்கங்கள் உள்ளதால், பொத்தம் பொதுவாக பெயரைக் குறிப்பிடாமல் பேச்சுக்கு அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவா் கு.வெங்கடேசன் தெரிவித்தாா்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதையே பிரதான கோரிக்கையாக இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்றும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில், திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும் அவா் தெரிவித்தாா்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT