தமிழிசை சௌந்தரராஜன்  கோப்புப்படம்.
சென்னை

தகுதியான வாக்காளா்கள் நீக்கப்படவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் (எஸ்ஐஆா்) வாயிலாக தகுதியான வாக்காளா்கள் யாருடைய பெயரும் நீக்கப்படவில்லை என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் (எஸ்ஐஆா்) வாயிலாக தகுதியான வாக்காளா்கள் யாருடைய பெயரும் நீக்கப்படவில்லை என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் (எஸ்ஐஆா்) மிக சிறப்பாக நடைபெற்று முடிவுபெற்றுள்ளது. இறந்தவா்கள், இரட்டை வாக்காளா்கள் என சுமாா் 1 கோடி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிா்த்து தகுதியான வாக்காளா்கள் யாருடைய பெயா்களும் நீக்கப்படவில்லை. சிறுபான்மையினா்களுக்கு எஸ்ஐஆா் படிவங்களை அதிகாரிகள் கொடுக்க மறுத்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களைப் பரப்பிவருகிறாா்.

அதுவும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வா் ஹிந்துகளுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறாா். மற்ற மத விழாக்களுக்கு வாழ்த்து கூறும் முதல்வா் ஹிந்து விழாக்களுக்கு வாழ்த்து கூற மறுப்பது ஏன்? 2026-இல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT