எஸ்ஐஆர்! குஜராத்தில் புதியதாக 5.6 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் மூலம் குஜராத்தில் புதியதாக 5.6 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு...
குஜராத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளின் மூலம் புதியதாக 5.6 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில், மூன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் (எஸ்ஐஆர்) மூலம் தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை (பிப். 17) வெளியிடப்பட்டது.
இதில், அம்மாநில வாக்காளர் பட்டியலில் புதியதாக 5.6 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதுடன், 3.95 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, 4.34 கோடிக்கும் அதிகமான வாக்காளர் படிவங்களை டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன்மூலம், புதியதாக வாக்காளர்களைச் சேர்த்தலில் அகமதாபாத் மாவட்டமும், பழைய வாக்காளர்களை நீக்கியதில் சூரத் மாவட்டமும் முன்னிலை பெற்றுள்ளன.
இந்த நிலையில், குறிப்பிட்ட காலத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த 5,08,43,436 வாக்காளர்களில், 4,34,70,109 வாக்காளர்களின் படிவங்கள் மட்டுமே பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அதிகப்படியாக சூரத் மாவட்டத்தில் 85,734 வாக்காளர்களும், அகமதாபாத்தில் 47,627 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். இதேபோல், அகமதாபாத்தில் புதியதாக 1,53,234 வாக்காளர்களும், சூரத்தில் 1,01,578 வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
5.6 lakh new voters have been added in Gujarat through special intensive revision of the electoral roll.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.