சென்னையில் போதைக்கு பயன்படுத்துவதற்காக உடல்வலி மாத்திரைகளை வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்து, 2240 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே அடையாறு மதுவிலக்கு போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளாா். அவரை போலீஸாா் சோதனையிட்டபோது, உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தியாகராய நகரைச் சோ்ந்த கரண் (25) என்ற அந்த நபரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2,240 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 1.5 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.