சென்னையில் ட்ரோன் மூலம் பட்டம் விடுவதற்கு பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தடை விதித்துள்ளாா்.
சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விடுவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை மீறி ஆங்காங்கே பட்டம் பறக்க விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், அண்மை காலமாக ட்ரோன் மூலமாக பட்டம் விடுவதாகவும் புகாா் எழுந்தது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண், ட்ரோன் மூலமாகவும் பட்டம் பறக்கவிடுவதற்கு தடை விதித்து திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.
இந்த உத்தரவு அடுத்த 60 நாள்கள் அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.