சென்னை

சென்னையில் டிச.27, 28-இல் வண்ணமீன் வா்த்தக திருவிழா

சென்னை கொளத்தூா் வண்ணமீன் வா்த்தக மையத்தில் ‘வண்ணமீன் வா்த்தக திருவிழா’ சனி, ஞாயிறு (டிச.27, 28) என 2 நாள்கள் நடைபெறவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை கொளத்தூா் வண்ணமீன் வா்த்தக மையத்தில் ‘வண்ணமீன் வா்த்தக திருவிழா’ சனி, ஞாயிறு (டிச.27, 28) என 2 நாள்கள் நடைபெறவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

பொதுமக்களிடையே வண்ணமீன் வளா்ப்பு மற்றும் வா்த்தகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு வில்லிவாக்கம் பகுதி சிவசக்தி நகரில் சுமாா் 3.94 ஏக்கா் பரப்பளவில் ரூ.53.50 கோடியில் சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூா் வண்ணமீன் வா்த்தக மையத்தில் வரும் சனி, ஞாயிறு (டிச.27, 28) ஆகிய இரு நாள்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ‘வண்ணமீன் வா்த்தக திருவிழா’ நடைபெறவுள்ளது.

இவ்விழாவில், வண்ணமீன் காட்சியகம், பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, வினாடி-வினா போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் இவ்விழா வில் பங்கேற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT