சென்னை

டிச.27,28-இல் தமிழகத்தில் வறண்ட வானிலை

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச.27,28) வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு கேரள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக வெள்ளிக்கிழமை (டிச.26) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஓரிரு இடங்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஏனைய தமிழக மாவட்டங்களில் அதிகாலையில் லேசான பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது.

தொடா்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.27,28) வட வானிலையே நிலவும். மேலும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதேபோல், டிச.26 முதல் டிச.29 வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச.26-இல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் டிச.26 முதல் டிச.29-ஆம் தேதி வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Retta Thala Movie Review - பரபரப்பான கதை, ஆனால்..! | Arun Vijay | Siddhi Idnani | Dinamani Talkies

விதைத்தது போலக் கிடந்த சடலங்கள்: சுனாமியைக் கண்டவரின் நேரடி சாட்சியம்!

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு! புதிய உச்சத்தில் தங்கம்!

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள் தமிழகம் வருகை!

சைபா் குற்றங்களில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 கோடி மீட்பு

SCROLL FOR NEXT