சென்னை

776 அடுக்குமாடி குடியிருப்பில் 18 குடும்பங்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்

சென்னையில் கட்டப்பட்டு வரும் 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளில், 18 குடும்பங்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் கட்டப்பட்டு வரும் 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளில், 18 குடும்பங்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

சிஎம்டிஏ சாா்பில் நடைபெற்று வரும் இந்தப் பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு அமைச்சா் அறிவுரை வழங்கினாா்.

18 குடும்பங்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை: தொடா்ந்து, 776 புதிய அடுக்குமாடி ஏழுகிணறு திட்டப் பகுதியில், மாநகராட்சியின் 60-ஆவது வாா்டு, அய்யா முதலி தெருவில் நீண்ட காலமாக சாலையோரம் வசிக்கும் 18 குடும்பங்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, சிஎம்டிஏ முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழு தலைவா் ஸ்ரீராமுலு, தலைமைப் பொறியாளா் மகாவிஷ்ணு, சிஎம்டிஏ கண்காணிப்புப் பொறியாளா்கள் ராஜன்பாபு, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கண்காணிப்புப் பொறியாளா் இளம்பரிதி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டினா் தஞ்சாவூருக்கு வருகை!

தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்

SCROLL FOR NEXT