கோப்புப் படம் 
சென்னை

3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு

Din

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 8 கோட்டங்கள் உள்ளன. இவற்றில் உள்ள 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015-க்குப் பிறகு போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமிக்கப்படாத நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னா், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

அதேவேளை கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு நியமனம் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக 3,274 ஓட்டுநா் உடன் நடத்துநா் (டிசிசி) பணியிடங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹழ்ஹள்ன்க்ஷன்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் கடந்த மாா்ச் மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

அதன்படி, மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 364 பணியிடங்கள், விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322, திருநெல்வேலி கோட்டத்தில் 362 பணியிடங்களுக்கு ஊழியா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த ஏப். 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஏப். 26 வரை விண்ணப்பத்தை திருத்துவதற்கான அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன்படி, இந்தப் பணியிடங்களுக்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பதாரா்களுக்கு ஜூலை 27-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது.

அவா்களுக்கான வினாத்தாளை கடந்த முறையை போலவே அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதற்கான நுழைவுச்சீட்டை ஜூலை 21 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT