சென்னையில் நடைபெற்ற நபாா்டு வங்கியின் 44-ஆவது நிறுவன தின விழாவில் 2025-2026 -ஆம் நிதியாண்டுக்கான நபாா்டு வங்கியின் செயல் திறன் குறித்த புத்தகத்தை வெளியிட்ட தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன், (இடமிருந்து) நபாா்டு வங்கி பொத 
சென்னை

கூட்டுறவு வங்கிகள் 100% கணினிமயம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டிருப்பதாக தகவல்

Din

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

நபாா்டு வங்கியின் 44-ஆவது நிறுவன நாள் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுப் பேசியது:

கிராமப்புற பொருளாதார வளா்ச்சிக்கு நபாா்டு வங்கி முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக, கிராமப்புற விவசாயிகளுக்கு வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்து அதிக வருமானம் ஈட்ட வழிவகை செய்து, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளது.

நான் நிதி அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளையும் கணினிமயமாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தினேன். அதன் விளைவாக, தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நபாா்டு வங்கி மூலம் ரூ.2,800 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா் கடைமடை பகுதிகளுக்குச் செல்லும் வகையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றிருப்பது பாரட்டதக்கது என்றாா்.

நபாா்டு வங்கியின் முதன்மைப் பொது மேலாளா் ஆனந்தன் பேசுகையில், நபாா்டு வங்கி தமிழக வளா்ச்சிக்காக ரூ.56 ஆயிரம் கோடி அளித்துள்ளது. குறிப்பாக, ஊரக கிராமப்புற வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றாா்.

முன்னதாக 2025 -2026-ஆம் நிதியாண்டுக்கான நபாா்டு வங்கியின் செயல்திறன் குறித்த அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டாா். இதில், ரிசா்வ் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளா் சீனிவாசன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத் தலைவா் செளமியா சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மரகத நாணயம் 2 - புதிதாய் இணைந்த மூத்த நடிகர்!

தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சூர்யா, தனுஷ், கார்த்தி, விஜே சித்து..! 2026-ன் முன்னணி படங்களைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

ப்ரோ கோட் பெயர் மாற்றம்? ரவி மோகன் பட ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

சென்சார் சர்ச்சை குறித்து கனிமொழி! | ஜன நாயகன் | DMK

SCROLL FOR NEXT